பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லையாக பாரதி கண்ணம்மா நடிகை!

16 December 2020 சினிமா
kaavyaarivumani.jpg

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்பொழுது அவருக்கு பதிலாக புதிய நடிகை அறிவிக்கப்பட்டு உள்ளார்.

விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றத பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நாடகமானது, தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பினைப் பெற்ற நாடகம் ஆகும். இந்த நாடகத்தில் வருகின்ற முல்லை கதிர் ஜோடியானது பல லட்சம் ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்த முல்லைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா, கடந்த வாரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவருக்குப் பதில் யாரை முல்லைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்ற அவசரத் தேடுதலானது நடைபெற்று வருகின்றது.

இதில், இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நாடகத்தில் நடித்து வருகின்ற நடிகையினை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரதி கண்ணம்மா நாடகத்தில், அறிவு என்றக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்ற நடிகையான காவ்யா அறிவுமணி அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரே அடுத்த முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவும், சூட்டிங் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS