மீண்டும் அதிக விற்பனையைப் பதிவு செய்த பார்லே ஜி! இந்தியா மகிழ்ச்சி!

12 June 2020 அரசியல்
parleg.jpg

இந்தியாவின் முக்கியப் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லே ஜியின் பிஸ்கெட்டுகள் தற்பொழுது, மீண்டும் நல்ல விற்பனையை அடைந்துள்ளன.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அன்றாட வேலைக்குக் கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பலரும் உண்ண உணவில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், வெறும் ஐந்து ரூபாயில் கிடைக்கும் இந்த பார்லேஜி பிஸ்கெட்டினை பெருமளவு வாங்கி உண்கின்றனர்.

மேலும், ஊரடங்கு காலத்தில் பெருமளவிலான நொறுக்குத் தீணிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனை சமாளிக்கவும், வேறு வழியில்லாமலும் பார்லேஜி பிஸ்கெட்டுகளை வாங்கி உண்டு வருகின்றனர். இதில் அதிகளவில் புரதம் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட விஷயங்கள் இருப்பதால், இதனை உண்ணும் பொழுது புது சக்தி உடலில் உண்டாகின்றது. இதனாலேயே கிராமத்து மக்கள் மற்றும் வட இந்தியாவில் இதனை பெருமளவில் வாங்கி உண்கின்றனர்.

இது குறித்து பேசியுள்ள பார்லேஜி நிர்வாக இயக்குநர், இந்த ஊரடங்கு காலத்தில் பார்லேஜியின் விற்பனை அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. தொடர்ந்து, பார்லேஜி விற்பனை சரிக்கி வந்த நிலையில், தற்பொழுது இந்த பிஸ்கெட் விற்பனை எங்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS