பார்லி நிறுவனத்தில் இருந்து 10,000 பேர் நீக்கம்! பொருளாதாரப் பின்னடைவு எதிரொலி!

21 August 2019 தொழில்நுட்பம்
parle.jpg

பார்லே பிஸ்கெட் நிறுவனத்தைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இந்நிறுவனம் இந்தியாவில் பல ஆண்டுகளாக பிஸ்கெட் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளது. அந்நிறுவனம் தற்பொழுது, தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்த சுமார் 10,000 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது.

ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது நம் தாய் நாடு. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனையின் காரணமாக, ஆட்டோமொபைல் தொழில் துறை முதல், பிஸ்கெட் தொழில் வரை, அனைத்துமே மரண அடி வாங்கியுள்ளது.

பார்லே நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பேட்டி அளிக்கையில், இந்திய மக்கள் 5 ரூபாய் கொடுத்து, ஒரு பொருள் வாங்குவதற்கேப் பல முறை யோசிக்கிறார்கள் எனக் கூறினார்.

மேலும், பொருளாதார நெருக்கடி காரணமாக, தன்னுடைய நிறுவனத்தில் இருந்து, 10,000 ஊழியர்களை நீக்கி உள்ளது பார்லே நிறுவனம். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளது.

தொடர்ந்து, பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதால், அடுத்து என்ன நடக்கும் என யாருக்கும் தெரியவில்லை. மேலும், ஐடி துறையில் அனைத்து முதலீடுகளும், பண பரிவர்த்தனைகளும் டாலரில் நடக்கின்றன. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக குறைந்துள்ளது.

பொருளாதார சீரமைப்பு எனக் கூறி, ஜிஎஸ்டி வரியை விதித்தனர். இதனால், 12% இருந்த வரியானது 18% உயர்ந்ததால் முதலுக்கே மோசம் ஏற்பட்டுள்ளது என நிறுவனங்களும், முதலாளிகளும் புலம்புகின்றனர்.

HOT NEWS