ஜனவரி 29ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்! சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு! என்ன ஸ்பெஷல்?

25 January 2021 அரசியல்
budgethalwa.jpg

வருகின்ற ஜனவரி 29ம் தேதி அன்று, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என, நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

கடந்த வாரம், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதைத் தொடர்ந்து, அல்வா கிண்டும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, அல்வா கிண்டினார். பின்னர், அதனை அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரானது, இந்த மாத இறுதியில் தொடங்கும் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

அதன் போலவ, தற்பொழுது வருகின்ற ஜனவரி 29ம் தேதி அன்று இந்திய பட்ஜெட் கூட்டத் தொடரானது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரானது, மக்களைவையில் மாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் நடைபெறும் என அறிவித்து உள்ளார். நேரமில்லா நேரம் மற்றும் கேள்வி நேரம் முதலியவை இடம்பெறும் எனவும், அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா இருக்கின்றப் பட்சத்தில், உறுப்பினர்கள் அவைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில், பலப் புதிய சட்டத் திருத்தங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேலை நேரத்தினை அதிகரிப்பது, இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாருக்கான சலுகைகளை அதிகரிப்பது, இராணுவத்திற்கான நிதியினை அதிகரிப்பது, விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையினை அதிகரிப்பது, பயிர் காப்பீட்டினை விரிவாக்குவது, வங்கிக் கடனை ஊக்குவிப்பது, ஆடம்பரப் பொருட்கள் மீது கூடுதல் வரி, ஒரு சிலப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது அல்லது வரியினைக் குறைப்பது உள்ளிட்டவைகள் இடம்பெறும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி, ஓடிடி தளங்களுக்கான சென்சார் விதிகளை அறிவிப்பது, கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்டவைகளை அறிவிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

HOT NEWS