தமிழகம் முழுவதும் இன்று முதல், அனைத்து பஸ்களிலும் 100% பயணிகள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல், கொரோனாவைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து அமலில் இருந்து வருகின்றது. கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இருப்பினும், பொருளாதார முடக்கம் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையினைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு விதிவிலக்குளை அறிவித்தது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது உலகம் முழுக்க கொரோனா வைரஸிற்கான மருந்தானது, கண்டுபிடிக்கப்படு வருகின்றன.
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தாங்கள் கண்டுபிடித்த மருந்தினை, பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றன. அமெரிக்காவில் இந்த ஆண்டின் இறுதியில் மருந்து விநியோகம் நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் அடுத்த வாரம், மருந்து விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த சூழலில், இந்தியாவில் கோவாக்ஸின் மருந்தானது தயாராகி வருகின்றது. இவைகளை அடிப்படையாகக் கொண்டும், கொரோனா தொற்றுக் குறைந்துள்ளதை கணக்கிட்டும் தற்பொழுது புதிய விதிவிலக்கு ஒன்றினை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, பேருந்துகளில் 50% பேர் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று முதல் இனி அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 100% பயணிகள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், இனி பயணிகள் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய இயலும்.