நாங்கள் அதனை கொரோனா மருந்து என்றேக் கூறவில்லை! பல்டி பதஞ்சலி!

01 July 2020 அரசியல்
patanjalimedicine.jpg

நாங்கள் உருவாக்கியுள்ள கொரோனில் மற்றும் சுவாசரி உள்ளிட்டவை, கொரோனாவிற்கான மருந்து என எப்போதும் கூறவே இல்லை என, பதஞ்சலி நிறுவம் கூறியுள்ளது.

கடந்த மே மாதம் 22ம் தேதி அன்று, யோகி பாபா ராம்தேவ் புதிதாக கொரோனில் மற்றும் சுவாசரி உள்ளிட்ட மருந்துகளை அறிமுகம் செய்தார். இந்த மருந்து கொரோனாவைக் குணமாக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கு மத்திய ஆயஷ் அமைச்சகம் இவ்வாறு விளம்பரம் செய்ய தடை விதித்தது.

இதனையடுத்து. நேற்று பதஞ்சலி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா புதிய விளக்கம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதில், நாங்கள் வெளியிட்டுள்ள மருந்துகளை பயன்படுத்தியவர்களுக்கு கொரோனாவில் இருந்து விடுதலை கிடைத்து குணமாகி உள்ளனர். இவ்வாறு தானே கூறினோம் எனவும், வேண்டும் என்றால், மருத்துவப் பரிசோதனைக்கு தயார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், பலர் பதஞ்சலி நிறுவனத்தினை அழிக்க முயற்சிப்பதாகவும், அதன் சதிச் செயலே இது எனவும் அவர் கூறியுள்ளார். இதனை, தற்பொழுது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

HOT NEWS