பதஞ்சலியின் கொரோனா மருந்து விளம்பரம்! மத்திய அரசு தடை!

24 June 2020 அரசியல்
patanjalimedicine.jpg

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைய, கொரோனில் மற்றும் சுவாசரி என்ற மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது, அதனை விளம்பரம் செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்திய அளவில் பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது யோகி பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம். இந்த நிறுவனம், தற்பொழுது அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ராம்தேவ், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் அளித்தப் பேட்டியில், தற்பொழுது உலகம் முழுக்கப் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, கொரோனில் மற்றும் சுவாசரி என்ற மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாக அவர் அறவித்தார்.

இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருந்தானது, ஆயுர்வேத மருந்தாகும். இதனைப் பயன்படுத்தியவர்களில் 1000 பேர் குணமாகி இருப்பதாகவும், இந்த மருந்தானது 3 முதல் 7 நாட்களில், கொரோனாவினைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என்றும் பாபா ராம்தேவ் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, அந்த மருந்தினை விளம்பரம் செய்ய தடை விதித்துள்ளது. இந்த மருந்தானது, இன்னும் சுகாதாரத் துறையினால் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும், எனவே இதனைப் பற்றி எவ்வித ஆராய்ச்சித் தகவல்களும் எங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளது.

HOT NEWS