முதல்வருக்குக் கடிதம் எழுதிய தெலுங்கு நடிகர் பவன்கல்யாண்!

30 March 2020 அரசியல்
pawankalyan.jpg

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன்கல்யாண் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதற்காக, தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டும் உள்ளது. இதனால், பலக் கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்கள், தங்கி வேலைப் பார்த்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பவண் கல்யாண் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், உயர்திரு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து, மீன்பிடிக்கச் சென்ற தமிழக கடற்கரைக்குச் சென்ற 99 மீனவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக, சென்னை துரைமுகத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களுக்குப் போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி, மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்து, அவர்களுடையக் குடும்பத்தார் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஜனசேனைத் தொண்டர்கள் மூலம், இதனை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி, கே.பழனிசாமி அவர்கள் இந்த விஷயம் தெரிந்து, உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்களின் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும், ஸ்ரீகாகுளம் ஜில்லா கலெக்டர் அவர்கள் இது குறித்து மேற்கொண்ட தகவலையும், 99 பேரின் தகவல்களையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS