உலகளவில் பிட்காயினைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்த தொழிலிலும் தற்பொழுது உலகின் முன்னணி பண வர்த்தக நிறுவனமான பே பால் நிறுவனமும் இறங்கி உள்ளது.
பிட்காயின் எனும் டிஜிட்டல் கரன்சிக்கு, நாளுக்கு நாள் டிமான்ட் அதிகரித்து வருகின்றது. இதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது, லட்சத்தில் இருந்து கோடிகளாக உயர்ந்துள்ளது. இதனால், இது போன்ற பணத்தினை உருவாக்கும் முயற்சியில், பேஸ்புக், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இவர்களால் பல நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்கள் சார்பில், புதிய டிஜிட்டல் கரன்சிகளைத் தயாரிக்கும் முடிவிற்குத் தள்ளப்பட்டு உள்ளன.
அந்த வரிசையில், பே பால் நிறுவனமும் புதிய கிரிப்டோகரன்சியினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இது வருகின்ற 2021ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகின்றது. இந்தப் பணத்தினை, பே பால் நிறுவனத்தின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் வர்த்தகத்திலும் பயன்படுத்தலாம் என்றுக் கூறப்பட்டும் உள்ளது. இதனால், பே பால் பயனர்கள் குஷியடைந்து உள்ளனர்.