தேசிய குடியுரிமை மசோதா மீதான வாக்குவாதமானது, கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில், அமித் ஷாவினைப் பார்த்து, ப சிதம்பரம் பேசினார்.
நாடாளுமன்றத்தில் ப சிதம்பரம் பேசுகையில், தேசத்தின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில், பதிவின் அடிப்படையில், இயற்கையின் அடிப்படையில் தான் குடியுரிமையானது காலம் காலமாக, உலகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், தற்பொழுது நம்முடைய அரசாஙம் ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டத்தினை முன்மொழிந்துள்ளது.
நாம் மக்களின் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளோம். நாம் ஜனநாயகத்தினைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். எல்லோரும் வழக்கறிஞர் ஆகிவிட முடியாது. எல்லோரும் வழக்கறிஞர்களும் அல்ல. நாம் தற்பொழுது இந்த சட்டத்தினை சர்ச்சைக்குரிய வகையில், மாற்றி அதனை நீதிபதிகளின் முன்னால் வைக்கின்றோம்.
இந்த சட்டத்தினை பற்றி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், அவர்கள் இது ஜனநாயகத்தின் அடிப்படையிலானதா அல்லது ஜனநாயகத்திற்கு விரோதமானதா என, வாதாடும் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் முடிவு செய்துவிடுவர். இது நாடாளுமன்றத்தின் கன்னத்தில் அறைந்தது போல் இருக்கும்.
நாடாளுமன்றம், இப்படியொரு ஜனநாயகமற்ற சட்டத்திருத்தினை உருவாக்கி உள்ளனர். அதனை, நீதிமன்றத்தில் ஒப்படைப்போம். நீதிமன்றம் முடிவு செய்யட்டும், இது ஜனநாயகமா அல்லது இல்லையா என்று எனப் பேசியுள்ளார்.