ப. சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத்துறை!

21 August 2019 அரசியல்
pchidambarm.jpg

ப சிதம்பரத்தைத் தேடப்படும் நபராக, இந்திய அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு இந்தியாவின் நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்த பொழுது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக 305 கோடி ரூபாய் வரை, முறைகேடு செய்ததாக, அமலாக்கத் துறையும், சிபிஐயும் குற்றம் சாட்டின.

மேலும், இந்த விஷயத்தில் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனமும் ஈடுபட்டத்தாக, அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீண்ட காலமாக, வாய்தா மற்றும் ஜாமீன் ஆகியவற்றைப் பெற்றுத் தப்பித்து வந்தனர் சிதம்பரமும், அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரமும்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், ப சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரண்டுமே குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ப சிதம்பரத்திற்கு வழங்கிய முன் ஜாமீனை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து, ப சிதம்பரம் சார்பில் மேல்முறையீட்டு மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில், முதலில் சிபிஐ அதிகாரிகள் சென்று பார்த்தனர். அங்கு சிதம்பரம் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், பின்னர் அமலாக்கத்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்றனர். அங்கு அவருக்காக காத்திருந்தனர். அவர் வராததால், அவரை இன்று தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

HOT NEWS