தாலிபான்களுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தானதன் காரணமாக, அமெரிக்காவிற்கு தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தாலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில், 11 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததன் காரணமாக, தாலிபான்களுடனானப் பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். அதிபரின் இந்த முடிவிற்கு எதிராக, தாலிபான்கள் தங்கள் தரப்பில் இருந்து, ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் பிடியில் இருக்கின்ற வரை, எங்களுடையத் தாக்குதல்கள் தொடரும் என்று கூறியுள்ளனர். டிரம்ப்பின் இந்த செயல், பல இழப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தும். மேலும், எங்களுடையத் தாக்குதல் அதிகமாகும் எனவும் எச்சரித்துள்ளனர்.
Taliban says Americans will die after Trump nixes talks. More here: https://t.co/nUebDLvngR pic.twitter.com/veW4KPRORe
— Reuters Top News (@Reuters) September 9, 2019