பிரியங்கா காந்தியின் போனிலும் வாட்ஸ்ஆப் வைரஸ்! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

04 November 2019 அரசியல்
priyankagandhi1.jpg

வாட்ஸ்அப் வைரஸ் மூலம் இதுவரை, உலகளவில் சுமார் 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தியின் வாட்ஸ்ஆப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.

பெகஸஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ், உளவு பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் ஒரு வாட்ஸ் ஆப் லிங்க் மூலம் பரவி வருகின்றது. இதனை, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து, இன்று இது குறித்து தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது, வாட்ஸ் ஆப் நிறுவனம்.

பேஸ்புக் நிறுவனத்தினை தலைமை நிறுவனமாக கொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம், இந்த விவகாரத்தில், உலகம் முழுக்க சுமார் 1400 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளது.

இந்தியாவினைப் பொறுத்தமட்டில், மேற்கு வங்க முதல்வர் மம்மதா பேனர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் உள்ளிட்டோருக்கு, உங்களுடைய ப்ரவைசி பாதிக்கப்பட்டு உள்ளது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் அனுப்பி இருக்கின்றது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான பிரியங்கா காந்தியின் வாட்ஸ் ஆப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவருக்கு வாட்ஸ் ஆப் தகவல் அனுப்பியுள்ளது.

இந்தத் தகவலை, காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜ்வாலே தெரிவித்துள்ளார்.

HOT NEWS