என்னை கடினமாக உழைக்கும் அதிபர் என மக்கள் கூறுகின்றனர்!

27 April 2020 அரசியல்
donaldtrumpfun.jpg

என்னை அமெரிக்க மக்கள், கடினமாக உழைக்கும் அதிபர் என்று பாராட்டுகின்றனர் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசும் பொழுது, அமெரிக்க மக்கள் அமெரிக்க அதிபர்கள் பற்றியும், தன்னைப் பற்றியும் நன்கு அறிவர். நான் பதவிக்கு வந்ததில் இருந்து, கடுமையாக உழைத்து வருகின்றேன் என்பதை அவர்கள் அறிவர். பதவியில் உள்ள எந்த அதிபரும் என்னைப் போல உழைத்ததில்லை என்று பொதுமக்கள் நம்புகின்றனர் என்றுக் கூறினார்.

மேலும் செய்தி நிறுவனங்களைத் தாக்கிப் பேசிய அதிபர் ட்ரம்ப், பொய்யான செய்தியினை பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அவர்களைத் தண்டிக்கும் பொருட்டு, சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் கூறினார். அவர் பேசுகையில், அமெரிக்காவில் தற்பொழுது 50,000க்கும் அதிகமானோர் மரணமடைந்துவிட்டதாகவும், கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended Articles

HOT NEWS