சபரிமலைக்குச் சென்ற பெண் மீது பெப்பர் ஸ்ப்ரே வீச்சு!

26 November 2019 அரசியல்
sabarimalabinduammini.jpg

இன்று காலையில், சபரிமலைக்குச் செல்ல முயற்சி செய்த இரண்டு பெண் சமூக ஆர்வலர்கள் மீது, மிளகாய் பொடி வீச்சு மற்றும் மிளகுப் பொடி எனப்படும் பெப்பர் ஸ்ப்ரே வீச்சு முதலியவை நடைபெற்றுள்ளன.

சபரிமலைக்கு இனி பெண்கள் செல்லலாம் என, உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டுத் தீர்ப்பளித்தது. அவ்வளவு தான், கேரளாவில் ஐயப்ப பக்தர்களால் பலப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மிகக் குறைவானப் பெண்கள் மட்டுமே, ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு சபரி மலையில் சீசன் தொடங்கி உள்ளது. அங்கு செல்ல இன்று காலையில், பிந்து அம்மினி மற்றும் துருப்தி தேசாய் என்ற இரண்டு பெண் சமூக ஆர்வலர்கள் சபரி மலைக்குச் செல்ல முயற்சி செய்தனர். அதற்காக, அவர்கள் மலை மீது ஏறி நடந்துள்ளனர்.

அப்பொழுது, அவர்களை வழிமறித்த ஐயப்ப பக்தர்கள் அவர்கள் மீது மிளகாய் பொடியினை வீசியுள்ளனர். மேலும், பெப்பர் ஸ்பேரவையும் அடித்துள்ளனர். இது குறித்து, போலீசார் வீசாரித்து வருகின்றனர். மேலும், அந்த இரண்டு பெண்களையும் போலீசார் பத்திரமாக, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

HOT NEWS