விவசாயிகள் போராட்டத்தில் சதி செய்ய முயன்றவர் கையும் களவுமாக கைது!

23 January 2021 அரசியல்
farmersprotestproblem.jpg

விவசாயிகள் போராட்டத்தினை கலைப்பதற்கு சதி செய்ய முயன்றதாக, ஒருவரை விவசாயிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

டெல்லியின் எல்லைப் போராட்டத்தில் 59 நாட்களாக, விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மத்திய அரசின் பேச்சினை விவசாயிகள் கேட்பதாக இல்லை. இனி, மத்திய அரசின் முடிவினை ஏற்றால் மட்டுமே, பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, விவசாயத்துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமர் தெரிவித்து உள்ளார்.

இருப்பினும், மூன்று வேளாண் சட்டங்களையும் பின் வாங்காத வரை, எங்களுடையப் போராட்டம் ஓயாது எனவும், தொடர்ந்து எங்களுடையப் போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். அத்துடன், வருகின்ற ஜனவரி 26ம் தேதி அன்று, குடியரசு தின விழாவானது இந்தியா முழுவதும் கொணாடப்பட உள்ளது. அன்று, விவசாயிகள் தங்களுடைய டிராக்டர் பேரணியினை நடத்த உள்ளனர். இதனை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக, இளைஞர் ஒருவரை விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் பிடித்து வைத்து உள்ளனர்.

அந்த இளைஞர் தன்னுடைய முகத்தினை மறைத்துக் கொண்டு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், என்னுடன் 10 நபர்கள் இந்தக் கூட்டத்திற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் இந்தப் போராட்டத்தினை சீர் குலைக்க சதி செய்துள்ளனர். இவர்கள், டிராக்டர் பேரணியின் பொழுது டிராக்டர்களின் பின்னால் இருந்து சுடுவதற்கு திட்டமிட்டு இருந்தனர். அவ்வாறு செய்தால், பேரணியில் குழப்பமும் பயமும் ஏற்படும்.

பேரணி சீர்குலையும். மேலும், பேரணி முடிவடையும் மேடையில் அமர்ந்து இருக்க உள்ள, நான்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைச் சுட்டுக் கொல்லவும் முடிவு செய்திருந்தோம். இதனை எங்களை செய்யச் சொல்லி அறிவுறுத்தி இருந்தனர் எனக் கூறியிருந்தார். இவரைப் பிடித்து, ஹரியானா போலீசாரிடம் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒப்படைத்தனர்.

HOT NEWS