சீனாவின் கொரோனா மருந்திற்கு பெரு நாட்டில் தடை! மோசமான விளைவுகளால் முடிவு!

12 December 2020 அரசியல்
covid19medicine.jpg

சீனாவில் கொரோனா வைரஸிற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்திற்கு, பெரு அரசு தடை விதித்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை 7 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உலகின் பல முன்னணி நாடுகள், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்து உள்ளனர். அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் மருந்தானது, வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல், முதன் முதலாக ரஷ்யா தன்னுடைய ஸ்புட்னிக் வி என்ற மருந்தினை, பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றது.

இதே போல், சீனாவின் சினோபார்ம் என்ற மருந்து தாயரிக்கும் நிறுவனத்தின் மருந்துகளானது, உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அபுதாபிக்கு சுமார் 10 லட்சம் டோஸ் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அதே போல் பல நாடுகள் சீனாவின் மருந்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதில், பெரு நாடும் சீனாவின் மருந்திற்கு முக்கியத்துவம் அளித்தது.

அந்த நாட்டில், சீனாவின் சினோபார்ம் மருந்தினை பரிசோதனை செய்ததில், மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டன. இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், உடனடியாக அந்நாட்டு அரசிற்குத் தகவல் அளித்தன. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது பெரு நாட்டில் சீனாவின் கொரோனா மருந்திற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்தது சீனா. அங்கு தான் இந்த வைரஸ் உருவானது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS