காஷ்மீர் பாகிஸ்தானின் இரத்தத்தால் உருவானது! பர்வேஷ் முஷாரப் பேச்சு!

08 October 2019 அரசியல்
PervezMusharraf.jpg

காஷ்மீர் மாநிலம், பாகிஸ்தானியர்களின் இரத்தத்தால் உருவானது என, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பர்வேஷ் முஷாரப் பேசியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச கூட்டமைப்பின் முன்னிலையில் பேசும் பொழுது, காஷ்மீர் தங்களுக்குச் சொந்தம் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.

இதனை தொடர்ந்து, தீவிரவாத அச்சுறுத்தல் காஷ்மீருக்கு இருந்து வருவதால், இந்திய இராணுவம் அங்கு குவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பெனசீர் பூட்டோ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தானிலிருந்து, சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்றார். மேலும், அவர் மீண்டும் பாகிஸ்தானில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அவர் தற்பொழுது செய்தியாளர்களுக்கு அளித்துள்ளப் பேட்டியில், பாகிஸ்தான் இரத்தத்தில் தான் காஷ்மீர் மாநிலம் உருவாகி உள்ளது. பாகிஸ்தான் அமைதியாக இதனைக் கையாள்கிறது. இருப்பினும், இந்தியாவின் தவறான அணுகுமுறையால் பாகிஸ்தான் கோபத்தில் உள்ளது. இரண்டு அணு ஆயுத நாடுகள், இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. பாகிஸ்தான் இராணுவத்தினர் தன் கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை, காஷ்மீர் மக்களுக்காக போராடுவர் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS