பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பிற்கு தூக்குத் தண்டனை! நீதிமன்றம் அதிரடி!

18 December 2019 அரசியல்
PervezMusharraf.jpg

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரபிற்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது இஸ்லமாபாத் சிறப்பு நீதிமன்றம்.

1998ல் பாகிஸ்தான் நாட்டின் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற முஷாரப், தன்னுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தி 1999ம் ஆண்டு, அந்நாட்டின் அரசாங்கத்தினை இராணுவத்தினைக் கொண்டு கைப்பற்றினார். தொடர்ந்து 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் சர்வாதிகார ஆட்சியினை நடத்தி வந்தார்.

2013ம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நவாஸ் ஷெரிப், பாகிஸ்தானிற்கு எதிராக தேச துரோகத்தில், முஷாரப் ஈடுபட்டதாக, அவர் மீது இஸ்லமாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனையடுத்து, மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு அந்த வழக்கினை விசாரித்து வந்தது.

இதனிடையே, பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்ற முஷாரப் அங்கேயே வசித்து வந்தார். தற்பொழுது அவருடைய உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பினை நேற்று இஸ்லமாபாத் நீதிமன்றம் வெளியிட்டது. அதில், பர்வேஸ் முஷாரப் ஒரு தேசத் துரோகி எனவும், அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS