கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதிகரிக்கும் பெட்ரோல் விலை!

16 March 2020 அரசியல்
petrolbunk.jpg

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 2321.43 ரூபாய்க்கு விற்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட பாதியாக, கச்சா எண்ணெயின் விலையானது குறைந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது குறையாமலேயே உள்ளது. மாறாக, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையானது, ஒரு லிட்டருக்கு 3 ரூபாயானது, அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதனடிப்படையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையானது, 72.57 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டரின் விலையானது, 66.02 ரூபாய்க்கும் விற்க்கப்படுகின்றது.

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையானது, 17.66 ரூபாயாகும். ஆனால், இந்தியாவில் இது விற்பனைக்கு வரும் பொழுது 72.57 ரூபாய்க்கு விற்க்கப்படுகின்றது. இதற்குப் பலரும் தங்களுடையக் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது நியாமா என்று, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

HOT NEWS