இனி பிஎப் பணம் எடுப்பவர்களால், முழுமையாகப் பணத்தை எடுக்க முடியாது. அந்த மாதிரி ஒரு கண்டிஷனை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும், நாம் வாங்கும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, பிஎப் பணம் தரப்படுகிறது. அவ்வாறு சேமிக்கும் பணத்தை, நாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ எடுப்பது நல்லது. அவ்வாறு, இந்தியாவில், பல கோடி பேர் பயன் பெறுகின்றனர். இது குறித்து, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்துப் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங், இனி பிஎப் பணத்தை 90 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்று கூறினார். இதனை முன்னிட்டு, இது குறித்த வரைவறிக்கை வெளியான உடன், பிஎப் கணக்கில் இருந்து 90% வரை மட்டுமே, நம்மால் எடுத்துக் கொள்ள முடியும்.