உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற கொரோனா வைரஸிற்கு, தற்பொழுது அமெரிக்காவில் முழுமையான மருந்தானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் பயோ என்டெக் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து, கொரோனா வைரஸிற்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. அவர்கள், அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் 43,000க்கும் அதிகமானோரிடம் மருந்து செலுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில், யாருக்கும் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை.
அத்துடன், இந்த மருந்தினை எடுத்துக் கொண்டவர்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பானது ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸானது கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது. இதனால், அந்நிறுவனம், இந்த மருந்து வெற்றி பெற்று உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மற்ற நாட்டு மருந்துகளைக் காட்டிலும், 90% வெற்றியினை இந்த மருந்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதனையொட்டி, இந்தியா உள்ளிட்டப் பல நாடுகளுக்கு இந்த மருந்தினை வழங்க, அந்த நிறுவனம் முன் வந்துள்ளது.
இருப்பினும், அதில் தற்பொழுது சிக்கல் எழுந்துள்ளது. இந்த மருந்தானது, மைனஸ் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், அதீத குளிரில் மட்டுமே வைக்க முடியும். அதற்கு மேம்படுத்தப்பட்ட குளிர்சாதனப் பெட்டியானது தேவைப்படுகின்றது. அது குறித்து தற்பொழுது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. இந்த மருந்து வெற்றிப் பெற்றதற்கு, உலக சுகாதாரத்துறை மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.