கொரோனாவிற்கு மருந்து தயார்! அனுமதிக்காக காத்திருக்கும் அமெரிக்க மருந்து நிறுவனம்!

30 November 2020 அரசியல்
vaccination1.jpg

கொரோனா வைரஸிற்கான மருந்துகள் தயாராக உள்ளது எனவும், அமெரிக்க அரசு அனுமதி வழங்கியவுடன் முழு வீச்சில் விநியோகம் செய்யப்படும் என, அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸானது பரவியது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல முன்னணி நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தன. இந்த சூழலில், ரஷ்ய நாடானது, ஸ்புட்னிக் வி என்ற மருந்தினைக் கண்டுபிடித்து உள்ளது. அதனை பொதுமக்களுக்கும் விநியோகித்து வருகின்றது. இந்த சூழலில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் தயாரித்த மருந்தானது, நம்பகத்தன்மை அற்றதாகக் கூறப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவினைச் சேர்ந்த பைசர் மற்றும் மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள், இந்த வைரஸிற்கு எதிரான மருந்து தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தன. இதன் மூன்று கட்ட சோதனைகளும் முடிவடைந்துள்ளது. இரண்டு நிறுவனங்களின் மருந்துகளும் 90% அதிகமான பலன்களை பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, இவைகள் தகுதியானவை என, அந்தந்த நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்த சூழலில், பைசர் நிறுவனமானது தற்பொழுது புதியத் தகவல் ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், தற்பொழுது எங்களுடைய மருந்தானது தயாராக உள்ளது. அமெரிக்காவின் உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியவுடன், அமெரிக்கா முழுவதும் விநியோகம் செய்யப்படும். இதற்காக விமான நிறுவனத்திடமும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தினமும் எங்களுடைய மருந்துகளை உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளோம்.

இந்த மருந்தினை எடுத்துக் கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகளும், டஜன் கணக்கான சரக்கு விமானங்களும் தங்களுடையப் பயணங்களை மேற்கொள்ள உள்ளன. மேலும், இந்த மருந்தினை சேமித்து வைக்கும் கிடங்குகளும் தயார்படுத்தப்பட உள்ளன என்றுத் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா அனுமதி வழங்கும் பட்சத்தில், கட்டாயம் இந்த மருந்தானது புத்தாண்டிற்கு பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றுக் கணிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS