மனிதர்களை மறைய வைக்கும் பிலடெல்பியா சோதனை! நடந்தது என்ன?

11 April 2020 கதைகள்
usseldrige.jpg source:wikimedia/common

தற்பொழுது வரை, இந்த மாதிரியான முயற்சியில் ஈடுபட்டதாக, அமெரிக்க அரசாங்கமும், அமெரிக்கக் கடற்படையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், அவர்கள் அப்படியொரு சோதனையை செய்தார்கள் எனப் பலரும், தங்களுடைய புத்தகத்தில் எழுதி வைத்து இருக்கின்றனர். அந்த அளவிற்கு, மிகவும் கொடூரமான விளைவுகளை இந்த பிலடெல்பியா சோதனையின் முடிவு உருவாக்கியிருந்திருக்கின்றது. உலகிலேயே அமெரிக்காவும், ரஷ்யாவும் தான் மிகக் கொடூரமான ஆய்வுகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. அவைகளில் ஒன்று தான் இந்த ஆய்வும்.

காலத்தினைப் பயன்படுத்தி, ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்ச்சி அடையச் செய்வது தான் இந்த ஆய்வு. ஆங்கிலப் படங்களில் டெலிபோர்டேஷன் என்பது குறித்து, பார்த்திருப்போம். அதனை நேரடியாக செய்தால், அது தான் இந்த சோதனை. 1943ம் ஆண்டுகளில், இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்பொழுது, எதிரிகளின் கப்பல்களுக்குத் தெரியாமல், மறைந்து தாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தினை உருவாக்க அமெரிக்கா முடிவு செய்து இருந்தது.

அதன்படி, மிகப் பெரிய ஜெனரேட்டர்கள் மற்றும் மெட்டல் காயில்கள் ஆகியவைகளுடன் பல, உபகரணங்கள் யூஎஸ்எஸ் எல்ட்ரிஜ் என்ற கப்பலில், பொருத்தப்பட்டன. அந்தக் கப்பலில் ராட்சத ஜெனரேட்டர்களும் உருவாக்கப்பட்டன. அந்தக் கப்பலும் கடலில் மிதந்து கொண்டு இருந்தது. அப்பொழுது, எதிரியின் கப்பல் வரும் பொழுது அந்த ஜெனரேட்டர்கள் ஆன் செய்யப்பட்டன. அவ்வளவு தான். அந்தக் கப்பலினை சுற்றி, பச்சை நிறத்தில் புகை மூட்டம் ஒன்று உருவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து, எதிரில் இருந்த எதிரி நாட்டுக் கப்பல் அமைதியாக நின்றது. திடீரென்று, இந்த பச்சை நிறப் புகை மறைந்தது. அவ்ளவு தான். அந்த யூஎஸ்எஸ் எல்ட்ரிஜ் கப்பலும் காணவில்லை.

சரியாக 200 மைல் தொலைவில் உள்ள நோர்போக் கடற்படைத் தளத்தில், மீண்டும் இந்த யூஎஸ்எஸ் எல்ட்ரிஜ் கப்பல் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. சரி, ஆய்வு வெற்றி என்று கருதிய விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி கலந்த தோல்வியேக் காத்திருந்தது. ஆம், அந்தக் கப்பலில் இருந்து ஊழியர்களில் சிலர் சடலமாக கிடந்தனர். ஒரு சிலருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. ஒரு சிலரின் உடல் பாகங்கள் ஆங்காங்கே கிடந்தன. அது மட்டுமின்றி, பலர் அந்தக் கப்பலோடு கப்பலாக இணைந்துவிட்டனர். அவர்களுடைய உடலானது, அந்தக் கப்பலின் உள்ளே பாதியும், வெளியே மீதியும் இருந்தது. எதிரிகளின் ரேடாரில் தெரியாமல் இருப்பதற்காக, மறைந்து பின் திட்டமிட்ட மற்றொரு இடத்தில் தோன்றுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதனைக் கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆராய்ச்சியானது, ஐன்ஸ்டீனின் எலக்ட்ரோமேக்னடிக் போர்ஸ் மற்றும் கிராவிட்டி ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டது என நம்பபப்படுகின்றது. இது குறித்து, யாருக்கும் முதலில் வெளியேத் தெரிய வரவில்லை. ஆனால், 1994ம் ஆண்டு தி கேஸ் பார் தி யூஎப்ஓ என்ற புத்தகம் ஒன்றினை, எம்கே ஜெஸப் என்பவர் எழுதினார். அப்பொழுது, அவருக்கு கார்லஸ் மிகுவல் அலன்டே என்பவர் கடிதங்களை எழுதியிருந்தார்.

அதில், 1943ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று, யூஎஸ்எஸ் எல்ரிட்ஜ் எனும், கேனான் வகைப் போர்க்கப்பலில், பச்சை நிறப் புகை வந்தது. பின்னர், அந்தக் கப்பலானது காணாமல் போனது. இதனை நான் பார்த்தேன் என எழுதியிருக்கின்றார். தன்னுடைய புத்தகத்தில், அமெரிக்கா வேற்றுக் கிரக வாசிகளின் உதவியுடன் பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றது எனவும், அவர் எழுதியுள்ளார்.

இவ்வளவு சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்த அந்த யூஎஸ்எஸ் எல்ட்ரிஜ் கப்பலானது, 1951ம் ஆண்டு கிரீஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டது. அங்கு அந்தக் கப்பலானது, முற்றிலும் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.

HOT NEWS