ஹேக் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்களில் இருந்து செக்ஸ் மெயில்! உலகினை மிரட்டும் மர்ம கும்பல்!

23 October 2019 தொழில்நுட்பம்
computervirus.jpg

இதுவரை எந்த வைரஸூம் செய்யாத வருமானத்தினை, புதிதாக உலகினை வலம் வரும் போர்பிக்ஸ் போட்நெட் செய்து வருகின்றது.

உலகில் இதுவரை இந்தப் போட்டினைப் பயன்படுத்தி சுமார், 4,50,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டு உள்ளன. அவைகளில், இருந்து, ஈமெயில் ஐடி, பாஸ்வேர்ட் போன்றப் பல தகவல்கள் பெறப்படுகின்றன. பின், அந்த மெயில் ஐடிக்கு ஒரு குறிப்பிட்ட மெயில் அனுப்பப்படுகின்றது.

அந்த மெயிலில், இது உங்கள் பாஸ்வேட். எங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள கூகுளைப் பாருங்கள். நாங்கள் உங்கள் கணினியை ஹேக் செய்துள்ளோம். உங்களுடைய தனிப்பட்ட அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்கள், மெயில்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க, எங்களுக்கு 800$ பணத்தினை பிட்காயினாக தரவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது வரை 11 பிட்களாயின் வரையிலும், இந்த போட்கள் மிகக் குறுகியக் காலத்தில் வசூல் செய்துள்ளன.

ஒரு டேட்டாபேசில் உள்ள மெயில் ஐடி லிஸ்டில், சுமார் 30,000 மெயில் ஐடிகள் உள்ளன. அவைகளுக்கு ஒரு மணி நேரத்தில் மெயில் செய்யும் வகையில், சர்வர் உட்பட பல வசதிகளை கையில் வைத்துள்ளது இந்த போட்டினை உருவாக்கியுள்ள மர்ம கும்பல்.

இவைகளிலிருந்து தப்பிக்க, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர்பைட்ஸ் என்ற இலவச ஆன்டி-வைரசினைப் பயன்படுத்த அறிவுறுதப்படுகின்றது.

Source: thehackernews.com/2019/10/phorpiex-botnet-sextortion-emails.html

HOT NEWS