கடற்கொள்ளையர்களின் கதையைப் படிப்பதற்கென்றே தனிக் கூட்டமே உள்ளது. அப்படி இருக்கையில், பேய்களே கடற்கொள்ளையர்களாக இருந்தால், அல்லது கடற்கொள்ளையர்கள் பேய்களாக இருந்தால் எப்படி இருக்கும்? அது பற்றியது தான் இந்தக் கதை.
அமெரிக்காவின் லூசியானாப் பகுதியில், கோம்பி தீவு எனும் தீவு உள்ள்ளது. இந்தத் தீவில் தான், இப்படியொரு அமானுஷ்யமானப் பேய்கள் இருக்கின்றன. இதனைப் பலரும் பார்த்து இருப்பதாக, வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து, கோம்போ-யாயா- ஏ கலெக்ஷன் ஆப் லூசியானா போல்க்டேல்ஸ் என்ற புத்தகத்திலும், இது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
கோம்பி என்ற தீவில், தங்கப் புதையல் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்தப் புதையலை பேய்கள் பாதுகாப்பதாகவும் எழுதப்பட்டு உள்ளன. இதனைப் பலரும் எடுக்க முயற்சி செய்து மரணமடைந்து உள்ளனர் அல்லது அந்தப் பேய்களால் சபிக்கப்பட்டு உள்ளனர்.
ஒரு நாள் கோம்பி தீவுகளுக்கு அருகில் உள்ள மற்றத் தீவுகளில்,ழ பலரும் வாழ்ந்து வந்தனர். அப்படி இருந்த தீவுகளில் இருந்தவர் தான் லூயிஸ். அவர் இந்தப் புதையல் பற்றிக் கேள்விப்பட்டு, அந்த கோம்பித் தீவிற்கு சிறியப் படகு மூலம் சென்றுள்ளார். அந்தப் படகில் செல்லும் பொழுது, ஒரு சிறிய விளக்கு ஒன்றினையும் எடுத்துச் சென்றுள்ளார். அந்த கோம்பித் தீவில் இறங்கியதும், உள்ளே நடக்க ஆரம்பித்து உள்ளார். அப்பொழுது இரண்டு தென்னை மரங்களைப் பார்த்துள்ளார். அந்த மரங்கள் மட்டுமே, அந்தத் தீவில் இருந்துள்ளன.
எனவே, அந்த மரங்களுக்கு இடையில் தான், புதையல் புதைக்கப்பட்டு இருக்கும் என எண்ணியுள்ளார். அவருடைய யூகமும், சரியாகவே இருந்துள்ளது. குழி தோண்டுவதற்கு, தன்னுடையக் கைகளையேப் பயன்படுத்தி இருக்கின்றார். தொடர்ந்து மூன்று அடித் தோண்டியதும், திடீரென்று வித்தியாசமான சப்தம் கேட்டுள்ளது. குழித் தோண்டுவதை நிறுத்திவிட்டு, சுற்றியும் பார்த்துள்ளார். யாரும் இல்லாததால், மீண்டும் குழித் தோண்டுவதை தொடர்ந்துள்ளார்.
மீண்டும் சப்தம் கேட்டுள்ளது. குழித் தோண்டுவதை நிறுத்தியிருக்கின்றார். அவர் மீது, நிழல்கள் விழுவதைக் கவனித்துள்ளார். பின்னால், இரண்டு பேர் நின்றுள்ளனர். அவர்கள் முகத்தில், தோல் இல்லை. எலும்பு மட்டுமே இருந்துள்ளன. இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியினை எடுத்தியுள்ளனர். அதனைப் பார்த்த லூயிஸ் அரண்டு விட்டான். அவர்கள் காலில் விழுந்து கதறி அழ ஆரம்பித்து விட்டான்.
அவன் சரணடைந்ததை அடுத்து, அவனை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அதனைத் தொடர்ந்து அவன் அங்கிருந்து ஓட ஆரம்பித்துள்ளான். தான் வந்தப் படகினை நெருங்கியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் படகில், பெரிய கண்களுடன், கூரிய கத்தியுடன் எலும்புக்கூடான முகத்துடன் ஒரு பேய் இருந்துள்ளது. இதனால், அவர் பயத்துடன் அதன் அருகில் சென்றுள்ளான். அது இவனை முறைத்துப் பார்த்து சிரித்துள்ளது. பின்னர், அது கடலில் இறங்கி சற்றுத் தூரம் நடந்துள்ளது. அப்படியே, மறைந்தும் விட்டது.
அவசர அவசரமாக படகில் ஏறி, வீட்டிற்கு வந்து மனைவியிடம் பேச வந்துள்ளான். அவனைப் பார்த்த, அவனுடைய மனைவிக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. அவனைப் பார்த்ததும் கத்திவிட்டாள். ஏன் கத்துகின்றாய் என, லூயிஸ் கேட்டுள்ளான். முகத்தை கண்ணாடியில் பாருங்கள் எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு, கண்ணாடியில் முகத்தைப் பார்த்த லூயிஸிற்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. காரணம், அந்த கடற்கொள்ளைப் பேய்கள் சாபம் அளித்துள்ளன. அதனால், அவனுடைய தலை முடியானது, நரைத்துவிட்டது.
அன்று முதல், தற்பொழுது வரை யாரும் அந்த தீவிற்கு செல்வது கிடையாது. அந்தத் தீவினைப் பற்றி தெரியாதவர்களே அங்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.