ரயில்வேயும் தனியாருக்கா? விளக்கமளித்த பியூஸ் கோயல் பதில்!

23 November 2019 அரசியல்
piyushgoyalspeech1.jpg

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களைத் தொடர்ந்து, இந்திய ரயில்வேயும் தனியாருக்காக விடப்பட உள்ளது என்ற செய்திகள் மீடியாவில் அடிபட்டு வந்தன.

இதற்கு நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே இந்தியாவின் மிகப்பெரிய சொத்து எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரும் அடுத்த 12 ஆண்டுகளில், இந்திய ரயில்வேத் துறையினை மேம்படுத்த சுமார் 50 லட்சம் கோடித் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ள அமைச்சர், இதனை மத்திய அரசிடம் இருந்துப் பெறுவது சாத்தியமில்லை. மேலும், பட்ஜெட்டிலும் இதற்கு இவ்வளவுப் பெரிய அளவில் பணத்தினை ஒதுக்க இயலாது. எனவே, இவ்வளவுப் பெரிய தொகையினைத் திரட்டுவதற்காக, தனியார் நிறுவனங்களும் இப்பொழுதுள்ள கொள்கைகளுக்குட்பட்டு, இந்திய ரயில்வேயுடன் இணைந்து செயல்படலாம் என்றுக் கூறியுள்ளார்.

இந்திய இரயில்வேயானது, இந்தியாவின் சொத்து, தொடர்ந்து அது மக்களின் சொத்தாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தரமான சேவை மற்றும் வசதிகளை வழங்குவதற்காக ரெயிலில் கிடைக்கும் சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்கின்றோம் என்றார்.

இவர் உண்மையில், இது அரசாங்கத்திற்கு என்று கூறினாலும், இப்படித் தான் இந்திய விமானத் துறையும் ஒரு காலத்தில் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர், தனியார் நிறுவனங்களை அனுமதித்தது தான் கடைசி. ஏர் இந்தியா நிறுவனம் விற்பனைக்கே வந்துவிட்டது. போகின்ற போக்கினைப் பார்த்தால் இந்திய இரயில்வேயும் அப்படித்தான் போல.

HOT NEWS