பிளாஸ்மா சிகிச்சை கைக் கொடுக்கும் என நம்பிக்கை! அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!

25 April 2020 அரசியல்
coronaplasma.jpg

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், தற்பொழுது டெல்லியில் உள்ள டெல்லிலோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில், பிளாஸ்மா சிகிச்சையானது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை நான்கு நோயாளிகள் மீது, பயன்படுத்தி உள்ளோம். அதில், அந்த நான்கு பேரும் பூரண குணமடைந்து உள்ளனர்.

குறிப்பாக, இந்த வைரஸ் பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நபர் ஒருவர், தற்பொழுது குணமாகி வீடு திரும்பியுள்ளார். இதில், மொத்தம் நான்கு பேர் குணமடைந்து உள்ளனர். இது தற்பொழுது புதிய தெம்பினை அளிக்கின்றது. கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு நம்பிக்கை அளிக்க ஆரம்பித்துள்ளது.

விரைவில் அந்த நான்கு பேரும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவர் என தெரிவித்தார். கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சையினை கடைபிடிக்க, மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்திருந்தது குறிப்ப்பிடத்தக்கது.

HOT NEWS