11ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து!

24 March 2020 அரசியல்
publicexam.jpg

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த 11ம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 24ம் தேதி மாலை ஆறு மணி முதல், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர உள்ளது.

இதனால், பொதுத்தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என, பாமக துணைத் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்கள் தாமதமாக வரலாம் என்றக் காரணத்தால், 30 நிமிடம் தாமதமாகத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், தற்பொழுது தமிழகப் பள்ளிக் கல்வித்துறையானது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகின்ற மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ள அனைத்து பிளஸ் 1 தேர்வுகளும், தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அன்று நடைபெற உள்ள தேர்வு பற்றியத் தகவல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், பிளஸ் டூ தேர்வுகளில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. திட்டமிட்டப்படி, பிளஸ் டூ தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

HOT NEWS