பிரதமர் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக, 101 பேரை போலீசார் தற்பொழுது வரை கைது செய்து உள்ளனர்.
பிரதமர் மோடி அவர்கள் கிஷான் திட்டம் என்றப் புதியத் திட்டத்தின் மூலம், 3 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கின்ற சிறு குறி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6,000 வீதம் உதவித் தொகையினை வழங்குவதாக அறிவித்தார். அதற்குப் பல விவசாயிகள் விண்ணப்பித்தனர். இதில், பலரும் பயனடைந்தனர். அவ்வாறு பயனடைந்தவர்கள் குறித்து, பல திடுக்கிடும் விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதில், பல லட்சம் பேர், தங்களை விவசாயி எனக் கூறி, இந்த உதவித் தொகையினை சட்ட விரோதமாகப் பெற்றுள்ளனர். இது குறித்து, புகார் எழுந்ததை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர்களுடைய விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் அம்பலமாகி உள்ளன. அரசுத்துறை ஊழியர்கள், பல பெயர்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, இந்த உதவித் தொகையினை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, 100க்கும் மேற்பட்டோர் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 105 கோடி ரூபாயானது, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக 101 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைத் தொடர்வதால், பலரும் இந்த பிரச்சனைகளில் சிக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.