ஊரடங்கு நீட்டிப்பு! இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது! பிரதமர் மோடி அதிரடி பேச்சு!

12 May 2020 அரசியல்
modilive19.jpg

வருகின்ற மே-17ம் தேதி உடன், ஊடரங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றினார் பிரதமர் மோடி.

அவர் பேசுகையில், இந்த ஒரே ஒரு வைரஸ் உலகத்தினையே சின்னாபின்னமாக்கி இருக்கின்றது. இதனால், மூன்று லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கின்றது. இது போன்ற உலகளாவிய பொதுமுடக்கம் என்பது, இதுவே முதல்முறை. கடந்த நான்கு மாதங்களாக, நம்முடைய பாரத நாடு தொடர்ந்து போராடி வருகின்றது.

மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள், தினமும் 2 லட்சம் உற்பத்தி செய்யப்படுகின்றன. நம் நாடு முக்கியமானக் காலக்கட்டத்தில் உள்ளது. இந்திய மக்களும் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்துள்ளனர். கொரோனா வைரஸிற்கு எதிரான போரில், முக்கியமானக் காலக் கட்டத்தில் இந்தியா இருக்கின்றது. சுயசார்பு உள்ள இந்தியாவிற்கே 21ம் நூற்றாண்டு சொந்தம்.

நம்முடைய நாட்டினை சுயசார்புடையதாக மாற்ற வேண்டும். இதற்கு முன்பும் கொள்ளை நோய்களை நாம் எதிர் கொண்டுள்ளோம். மக்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டே, நாம் முன்னேற்றத்தினை நோக்கி செல்ல வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் இருந்து, உலகமே கற்று வருகின்றது. கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றிப் பெறுவோம். புதிய விடியலை நோக்கி நம் பாரத நாடு முன்னேறிக் கொண்டே இருக்கின்றது.

தற்போதைய நெருக்கடி, நமக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது. இந்திய மருந்துகள், உலகத்துக்கே நம்பிக்கை அளிக்கின்றன. ஜீரோவில் இருந்து தினமும் 2 லட்சம் மருந்து உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதே போல், இரண்டு லட்சம் முகக்கவசங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருகின்றது.

இந்திய திருநாடு, ஐந்து பெரும் தூண்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக பொருளாதாரம், இரண்டாவதாக தொழில்நுட்பம், மூன்றாவதாக துடிப்பான சமுதாயம், நான்காவதாக அடிப்படைக் கட்டமைப்பு, ஐந்தாவதாக பொருள்களுக்கான தேவை. கோடிக் கணக்கான மக்கள், கடும் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

தற்பொழுது இந்திய பொருளாதாரத்தினை மேம்படுத்த 20 லட்சம் கோடியில் திட்டம் உள்ளது. இதன் மதிப்பு, இந்திய ஜிடிபியில் 10 சதவிகிதம் ஆகும். இது குறித்த விரிவான அறிவிப்பினை, நிதியமைச்சர் பிறகு அறிவிப்பார். தற்போதைய சூழலில், துணிச்சலான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, இந்தியா தயாராகி வருகின்றது. நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தகம் கொண்டு வரப்பட உள்ளது.

விவசாய விளைப்பொருட்களை சந்தைப்படுத்தல் உள்ளிட்டவைகளிலும், சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்படும். உள்நாட்டுப் பொருட்களை சர்வதேச விற்பனைக்கும், சர்வதேச பொருட்கள் உள்ளூர் விற்பனைக்கும் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்பொழுது இந்தியா முழுவதும் உள்ள ஊரடங்கு நீட்டிப்பினை, அறிவித்தார். அதனுடன், இந்த நீட்டிப்பு குறித்து, மே-18ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

HOT NEWS