ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் வயல்! பிரதமர் நாட்டிற்கு அர்பணித்தார்!

10 July 2020 அரசியல்
modiinauguration.jpg

ஆசியாவின் மிகப் பெரிய சோலார் மின்வயலினை, பாரதப் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா என்ற இடத்தில், சுமார் 590 ஏக்கர் பரப்பளவில், ஆசியாவிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி சக்தி மூலம், மின்சாரம் தயாரிக்கும் மின்சார வயல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதனை பிரதமர், காணொலி வாயிலாகத் துவக்கி வைத்தார்.

சுமார் 750 மெகாவாட் அளவிற்கு, மின்உற்பத்தி திறனுள்ள இந்த மின் வயலானது, இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய மோடி, இது தற்போதைய தேவைக்கு மட்டுமல்லை, 21ம் நூற்றாண்டின் தேவைப் பூர்த்தி செய்வதற்கு என்றும் கூறினார்.

இந்த மின் வயல் மூலம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டுமின்றி, டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும் என்றுக் கூறினார். அதோடு, மத்தியப் பிரதேசத்தில் சாஜாபூர், நீமூச் மற்றும் சத்தார்பூர் ஆகியப் பகுதிகளிலும் மின்வயல் அமக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

HOT NEWS