அமைதி காக்க வேண்டும்! பிரதமர் வேண்டுகோள்!

09 November 2019 அரசியல்
modimankibat.jpg

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பானது, இன்று காலை 10.30 மணியளவில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை இராணுவத்தினர் பாதுகாப்பு படையில் ஈடுபட்டுள்ளனர். அயோத்திப் பகுதியில், 4,000 துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு மற்றும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர். மேலும், உள்ளூர் போலீசாரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் பகுதிகளில், துப்பாக்கி ஏந்தியப் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். சிசிடிவி கேமிரா மூலமும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எந்தவொரு சமூகத்தினருக்கும் கிடைத்த வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ கருதக் கூடாது. அயோத்தி தீர்ப்புக்கு பிறகு, அமைதி மற்றும் ஒற்றுமையை காப்பதே நமது முன்னுரிமை பணியாக இருக்க வேண்டும். அயோத்தி தீர்ப்பையொட்டி, நாட்டில் ஒற்றுமையான சூழ்நிலையை பராமரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

HOT NEWS