தற்சார்பு இந்தியா மட்டுமே நமக்கான ஒரே வழி பிரதமர் மோடி உரை!

02 June 2020 அரசியல்
modicii.jpg

இன்று நடைபெற்ற சிஐஐ தொழிற்கூட்டமைப்பு நடத்திய கூடத்தில், வீடியோ மூலம், பிரதமர் மோடி அவர்கள் இன்று உரையாற்றினார்.

அவர் பேசுகையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. தொழிலதிபர்கள் தொடர்ந்து நாட்டிற்கும், நாட்டு மக்களின் வாழ்விற்கும் தேவையான அனைத்து திட்டங்களையும் திறமையாக உருவாக்கி வருகின்றனர். அது மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்தியாவிற்கு கொரோனாவிலிருந்து பாதுகாப்பும், அதே சமயம் பொருளாதார வளர்ச்சியும் மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்தியப் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதில், இந்திய அரசாங்கம் முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. நம் நாட்டின் விவசாயிகள், நம் நாட்டில் எங்கு வேண்டும் என்றாலும் தங்களுடையப் பொருட்களை விற்கும் வகையில் பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த கொரோனா ஊரடங்குக் காலக் கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 53,000 கோடி அளவுக்கு நிவாரணத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் முன், நம் இந்தியாவின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், நம் நாட்டில் முதலீட்டினை அதிகரிக்க உதவும். இந்த ஊரடங்குக் காலக் கட்டத்தில் 74 கோடி பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. தற்சார்பு இந்தியாவே பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான ஒரே வழி என்று அவர் பேசியுள்ளார்.

HOT NEWS