ஏப்ரல் 27 அனைத்து முதல்வர்களுடன் ஆலோசனை! நாளை மக்களுடன் உரையாடல்!

23 April 2020 அரசியல்
modi7request.jpg

ஏப்ரல் 27ம் தேதி அன்று, அனைத்து மாநில முதல்வர்களுடனும், வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம், பிரதமர் மோடி உரையாட உள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, மே-3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து, கட்டுப்பாட்டிற்குள் வராமல் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், அரசாங்கம் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றது. தன்னால் இயன்ற அனைத்து சேவைகளையும், மிக எளிதாக மக்களுக்குக் கிடைக்கும்படி செய்து வருகின்றது. மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், தெலுங்கான, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தான், இந்த வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து அறிக்கையினை வெளியிட்டது மத்திய அரசு மேலும், ஹாட்ஸ்பாட் பகுதிகளையும் அறிவித்தது. இருப்பினும், இந்த வைரஸானது கட்டுக்கடங்காமல் பரவி கொண்டே இருப்பதால், அடுத்த என்ன செய்வதென்று வருகின்ற ஏப்ரல் 27ம் தேதி அன்று, இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையில், ஊரடங்கினை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை (ஏப்ரல்24) பஞ்சாயத்து ராஜ் தினம் என்பதால், நாட்டிலுள்ள மக்களுடன் வீடியோ மூலம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நாட்டிலுள்ள அனைத்துக் கிராமப் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளிலும், வீடியோ கான்ப்ரன்ஸிங் மூலம் கலந்து கொள்கின்றார்.

HOT NEWS