வலிமையடையும் போக்சோ சட்டம்! மத்திய அரசு அதிரடி!

16 March 2020 அரசியல்
raviips.jpg

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்கான, போக்சோ சட்டத்தினை மேலும் வலிமையாக்கி உள்ளது மத்திய அரசு. இதனால், குற்றவாளிகளின் எண்ணிக்கைக் குறையும் எனவும், குற்றவாளிகளுக்கான தண்டனை கடுமையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக, புதிய விதிமுறைகளைக் கொண்ட அறிக்கையினை, சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி, சிறார் ஆபாசப் படம் குறித்த தவல்களை சேமிப்பது மற்றும் தடுப்பது, காப்பகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களின் தகவல்களை உறுதிப்படுத்துவது உள்ளிட்டவைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 30 நாட்களுக்குள், உரிய காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதற்கும் ஏற்ற வகையில், விதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.

HOT NEWS