இதைக் கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில், விஷயம் அப்படி! அனைவரும் சிறுவயது முதல் விரும்பி விளையாடும் விளையாட்டாகவும், அனைவரும் விரும்பிப் பார்த்த டி.வி. நிகழ்ச்சியாகவும், இருந்ததுப் போக்கிமான் ஆகும். இது சென்ற ஆண்டு ஆன்ட்ராய்டு கேம்மாக வந்து உலகமெங்கும் சக்கைப் போடு போட்டது.
கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் அதிகமாக ஆன்ட்ராய்டு போன்களை உபயோகிப்பவர்கள் இந்தக் கேமை விளையாடி உள்ளனர். அப்படிப்பட்ட இந்தக் கேம்மில் வரும் சில மிருகங்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? இதோ உங்களுக்காக...
ஸ்டங்க்ஃபிஸ்க் & ஸ்டார்கேஸர் பிஸ் [STUNFISK & STARGAZER FISH]இந்த போக்கிமானின் கண்கள் சற்று மேலாக இருக்கும். இதைப் போன்ற ஒரு மீனைக் கடலில் கண்டுபிடித்துள்ளனர். இந்த மீனின் கண்கள் பார்ப்பதற்கு ஸ்டங்க்ஃபிஸ்க்கின் கண்களைப் போன்று இருக்கின்றன. அதுமட்டுமின்றி, இதன் உடல் அமைப்பும் பார்ப்பதற்கு அப்படியே ஸ்டங்க்ஃபிஸ்க்கைப் போலவே இருக்கின்றன. பார்ப்வர்களுக்கு சற்று வினோதமாகத் தெரிந்தாலும், இது ஒரு சிலக் கடல்பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகிறது.
சேன்ட்ஸ்லாஸ் & பெங்ஃகொலின் (SANDSLASH & A PANGOLIN)இந்த மிருகம் பார்க்க அப்பிராணியைப் போன்று காட்சியளிக்கிறது. இது மிகவும் சாதுவாகவும், அமைதியாகவும் வாழும். போக்கிமானில் சேன்ட்ஸ்லாஸ் என்றப் பெயரில் இம்மிருகம் இருக்கிறது. இம்மிருகத்தின் உடல் முழுவதும் செதில்களால் மூடப்பட்டுள்ளது. தனக்கு ஏதாவது ஆபத்து என்று நினைக்கும் பொழுது தன்னுடையச் செதில்களால் தன் உடலை மூடிக் கொள்கிறது.
குரோக்கோடைல் & காரியல் (KROOKODILE & GHARIAL)இதுப் பார்ப்பதற்கு அப்படியே காரியலைப் போன்று உள்ளது. குரோக்கோடைல் போக்கிமானில் வரும் மிருகங்களில் ஒன்று. இது முதலையின் உருவத்தைக் கொண்டிருக்கும். ஆனால், அனைத்து முதலைகளும் இந்த உருவ அமைப்பில் இருப்பதில்லை. காரியல் வகை முதலைகளேப் பார்ப்பதற்கு அப்படியே போக்கிமானில் வரும் குரோக்கோடைலைப் போன்று இருக்கும்.
சேட்டோட் & த எல்லோ கலர்டு லவ் ஃபேர்ட் [CHATOT & THE YELLOW-COLLARED LOVEBIRD]இதில் தலையின் பின்புறத்தைத் தவிர்த்து அனைத்து விதத்திலும் சேடோட் பார்ப்பதற்கு அப்படியே மஞ்சள் நிற லவ்பேர்ட்டைப் போல இருக்கின்றது. இதன் அளவும் சரி, உருவ ஒற்றுமையும் சரிப் பார்ப்பதற்கு அப்படியே சேட்டோட்டைப் போன்று இருக்கிறது.
இதில் கோரபஸ்ஸின் உருவத்தில் கடலடியில் ஒரு மீனைக் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட மீனின் மூக்கும், இரண்டு கைகளும் பார்ப்பதற்கு அப்படியே கோரபஸ்ஸையே கடலுக்குள் விட்டதைப் போன்று உள்ளது. இவை இரண்டின் உடல் அமைப்பும், உருவமும் அப்படியே ஒத்துப் போகிறது.
இகன்ஸ் & தி டிஸ்பாஸ் இன்டிகா பாம்பு [EKANS & THE DISPAS INDICA SNAKE]வட அமெரிக்காவின் அமேசானைத் தாயகமாகக் கொண்டு இயற்கையாக உருவான டிஸ்பஸ் இன்டிகஸ் பாம்பைப் போன்று போக்கிமானிலும் ஒரு உயிரினம் உள்ளது. அதன் பெயர் இகன்ஸ். இது அப்படியே எவ்வித வேற்றுமையின்றி பார்ப்பதற்கு இண்டிகா பாம்பைப் போலவே இருக்கிறது.