அடங்காத பொதுமக்கள்! கை வரிசையைக் காட்ட ஆரம்பித்த போலீஸ்!

25 March 2020 அரசியல்
policelockdown.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஏப்ரல் 14ம் தேதி வரை, அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக பாரதப் பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து வாங்குவதனைத் தவிர்த்து மற்ற எந்தக் காரணத்திற்காகவும் வெளியில் வரக் கூடாது என, வேண்டுகோள் விடுத்தார். இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனிடையே, பல இடங்களில் இந்த வைரஸ் தொற்றுப் பற்றிக் கவலைப்படாத பொதுமக்கள், சாலைகளில் சாவகாசமாக நடமாட ஆரம்பித்தனர். இதனால், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தங்களுடைய கை வரிசையைக் காட்ட ஆரம்பித்தனர்.

முதலில் சாலைகளில் வந்த அனைவரிடமும், வீட்டிற்குச் செல அறிவுறுத்தினர். ஆனால், பொதுமக்கள் அடங்காத காரணத்தால் போலீசார் லத்தியால் அடிக்க ஆரம்பித்தனர். ஒருவர் ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டு, சாலையில் வந்தார். அந்த ஆட்டோவினை மடக்கியப் போலீஸ், அவரை லத்தியால் அடிக்க ஆரம்பித்தது. இதனால், அங்கிருந்து தப்பித்தால் போதும் என அந்த ஓட்டுநர் பதறி அடித்து ஓடினார். மேலும், சாலையில் பலரினை தங்களுடையப் பாணியில் போலீசார் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.

HOT NEWS