பிக்பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்!

22 August 2019 சினிமா
ambanisangeet.jpg

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகளின்படி, நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து, வெளியேற்றப்பட்டார்.

இதனிடைய, ஏசியன்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் திரு. பிரசாத் அவர்கள், சென்னையில் உள்ள கிண்டி காவல் நிலையத்தில் நடிகை மதுமிதா மீது புகார் கொடுத்துள்ளார்.

அவர் அளித்துள்ளப் புகாரில், இதுவரு மதுமிதாவிற்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை, வழங்கிவிட்டோம். மீதமுள்ள 42 நாட்களுக்காக ஒரு நாளுக்கு 80,000 ரூபாய் வீதம் தருவாதகவும் கூறிவிட்டோம்.

இந்நிலையில், நடிகை மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு, தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வேன் என, வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

இதனையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது ஏசியன்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ். ஒரு விஷயம் கவனித்தீர்களா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுமிதாவிற்கு எவ்வளவு சம்பளம்னு?

HOT NEWS