இறந்தவருக்கு கொரோனா! அலறிய அதிகாரிகள்! தெருவுக்கே சீல்!

19 April 2020 அரசியல்
socialdistance.jpg

சென்னையில் இறந்தவருக்கு, கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அவர் தங்கியிருந்த பகுதியானது, சீல் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில், கொரோனா வைரஸானது பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், 22 மாவட்டங்களை மத்திய அரசு ஹாட்ஸ்பாட்டாக அறிவித்துள்ளது. அங்கு, பொதுமக்கள் தேவையில்லாமல், வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று முடிந்த ஜமாத் கூட்டத்திற்கு சென்று வந்தார் 95 வயதுடைய முதியவர். அரசாங்க வேண்டுகோளின் படி, தாமாக முன்வந்து மருத்துவமனையில் அடையாளப் படுத்திக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து இரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

முதல் கட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றத் தகவல் வெளியானது. ஆனால், அதற்குள் அவர் நெஞ்சுவலியால் மரணமடைந்து விட்டார். 95 வயதுடைய சுதந்திரப் போராட்டத் தியாகியான அவர், மரணமடைந்ததை அடுத்து, அவருடைய உடலுக்குப் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அவருடைய இரத்தத்தை பரிசோதனை செய்த இறுதி முடிவு வெளியானது. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவர் தங்கியிருந்த சிந்தாகிரி பேட்டையில் உள்ள அவருடைய தெருவிற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அவருடைய இறுதி மரியாதையில் கலந்து கொண்ட, 34க்கும் மேற்பட்டோரை வீட்டிலேயே வைத்துக் கண்காணித்து வருகின்றனர். அந்த முதியவரின் மகன்களை தற்பொழுது, ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தனிமைப்படுத்தி சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS