போலீஸ் எஸ்ஐயின் பாராட்டுக்குரிய பேச்சு! ப்ளீஸ் வெளியே வராதீங்க!

25 March 2020 அரசியல்
policecovid19.jpg

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தவரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் தேவையில்லாமல் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்தினை சரி செய்யும் ரஷீத் என்ற எஸ்ஐ, கண்ணீர் மல்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அரசாங்கத்தின் அறிவுறுத்தலையும் மீறி, பொதுமக்கள் சாலையில் நடமாட ஆரம்பித்துள்ளனர். இதனால், போலீசார் தற்பொழுது அவர்களை அதட்டி வீட்டிற்குள் இருக்கும் படி, அறிவுறுத்தி வருகின்றனர். அண்ணா சாலையில் பணியில் இருந்த ரஷீத் என்ற எஸ்ஐ, இவ்வளவு பேர் சாலையில் நடமாடினால் எப்படி இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும். அனைவரையும் கை எடுத்துக் கும்பிடுகின்றேன். தயவு செய்து யாரும் சாலையில் நடமாட வேண்டாம். உங்கள் காலைப் பிடித்துக் கேட்கின்றேன் என கூறினார்.

நீங்கள் தான் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். நிலைமையைப் புரிந்து கொண்டு நடங்கள். தயவு செய்து வராதீங்க. வளர்ந்த நாடுகளால் கூட ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆதலால், யாரும் வெளியில் வராதீர்கள். நாட்டிற்காக இதனைச் செய்யுங்கள். உங்கள் காலைத் தொட்டுக் கேட்கின்றேன். யாரும் வராதீங்க என்றுக் கூறினார். அப்பொழுது, சைக்கிளில் வந்த நபர் ஒருவர், அந்த எஸ்ஐயின் காலிலேயே விழுந்துவிட்டார். அவரை எழுப்பிய எஸ்ஐ, அவரிடமும் வேண்டுகோள் விடுத்தார். இது தற்பொழுது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS