இலங்கையில் அழிக்கப்படும் தமிழ் போராளிகளின் அடையாளங்கள்!

09 January 2021 அரசியல்
yaluniversity.jpg

இலங்கையில் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள, முள்ளிவாய்க்கல் நினைவு சின்னமானது தற்பொழுது இடித்துத் தள்ளப்பட்டு உள்ளது.

இலங்கையில் உள்ள யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் 2018ம் ஆண்டு பொங்கு தமிழர் நினைவு தூண் மற்றும் மாவீரர் நினைவு தூபி வைக்கப்பட்டது. அதே போல் 2019ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியும் வைக்கப்பட்டது. இந்த தூபிக்கள் அனைத்துமே இலங்கை உள்நாட்டு போரின் போது, வீரமரணமடைந்த தமிழர்களின் நினைவாக இங்கு அவை வைக்கப்பட்டன.

இந்த சூழலில், நேற்று இரவு யாரும் எதிர்பாராத வகையில் பல்கலைக்கழகத்தின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டன. வெளியில் இருந்து உள்ளே யாரும் வரக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக் கழகத்திற்குள் இருந்த புல்டோசர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியினை நீக்கி உள்ளனர். அதனை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

இது தற்பொழுது இலங்கையில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும், மாணவர்களும் அந்தப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் குவிந்து உள்ளனர். பிரச்சனைகள் எதுவும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக, அங்கு போலீசார் உட்பட பலப் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நினைவு தூபியானது, நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே இடிக்கப்பட்டு உள்ளது என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது.

HOT NEWS