இந்தியாவினையே உலுக்கியப் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரினை சிபிஐ கைது செய்துள்ளது.
பொள்ளாச்சியினைச் சேர்ந்த சபரி ராஜன் என்பவர், பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வைத்து, அந்தப் பெண்களை தன்னுடைய நண்பர்களுக்கும் இரையாக்கிய விஷயங்கள் நாட்டினையே உலுக்கி உள்ளது. தன்னுடன் பழகும் பெண்களை, பணக்காரத் தோற்றாத்தினைக் காட்டி ஏமாற்றி, பின்னர் அவர்களை மர்ம பங்களாவிற்கு அழைத்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அங்கு அந்தப் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதுடன், அந்தப் பெண்களை வீடியோவும் எடுத்து விடுகின்றார். அதனை வைத்து அந்தப் பெண்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். ஒரு சில சமயங்கள், அந்த பங்களாவிற்குள் ஏற்கனவே, தன்னுடைய நண்பர்களை ஒளிந்திருக்கும் படிக் கூறிவிட்டு, பெண்களை அழைத்து வருவார். அவ்வாறு வந்ததும், அந்தப் பெண்ணை இவருடைய நண்பர்களுடன் இணைந்து, சித்தரவதை செய்து அனுபவித்து உள்ளார். இவ்வாறு சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர்.
2019ம் ஆண்டு பொள்ளாச்சியினைச் சேர்ந்த பெண் ஒருவர், இது பற்றி போலீசில் புகார் தெரிவித்தார். இதனை வைத்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். ஆனால், இந்த வழக்கு போலீசாருக்கே தலைசுற்றும் வழக்காக மாறியிருக்கின்றது. காரணம், அவ்வளவு சில்மிஷங்கள் இந்த வழக்கில் நடைபெற்று உள்ளன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் மலைபோல் குவிந்த வண்ணம் உள்ளன. தற்பொழுது கூட 2 பேர் புகார் தெரிவித்து உள்ளதாக சிபிஐ தெரிவித்து உள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக வசந்த் குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் என்ற 5 பேரினை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இந்த வழக்கானது சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றப்பட்டு, பின்னர் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ நடத்திய விசாரணையின் காரணமாக, அதிமுக பிரமுகர் அருளாணந்தம் உட்பட, ஹேரன்பால், பாபு ஆகிய மூன்று பேரினையும் தற்பொழுது சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வருகின்ற ஜனவரி 20ம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அருளாணந்தத்தினை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்குவதாக, அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. இது தற்பொழுது இந்த வழக்கினை சூடுபிடிக்க வைத்துள்ளது.