பொங்கல் பரிசு வழங்க கால அவகாசம் நீட்டிப்பு! நீங்கள் வாங்கிவிட்டீர்களா?

14 January 2020 அரசியல்
pongalgift.jpg

பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு, தமிழக அரசு பொங்கல் பரிசினை அறிவித்தது. தேர்தல் நடைபெற்ற இடங்களில், தாமதமாகவே பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இதனையடுத்து, பொங்கல் பரிசு பெருவதற்கான கால அவகாசத்தினை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல், பொங்கல் திருவிழாவிற்கான பச்சரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை இவற்றுடன் 1000 ரூபாய் பணமும் பரிசுப் பொருளாக, ரேசன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு, தமிழக அரசு வழங்கி வருகின்றது.

பொருட்களை வழங்கி வந்த நிலையில், நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27ம் தேதியும், 30ம் தேதியும் நடைபெற்ற காரணத்தினால், அந்தப் பகுதிகளில், பொங்கல் பரிசு வழங்குவது தாமதம் ஆனது. சுமார், ஒரு கோடியே 97 லட்சம் பேருக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

வரிசை வாரியாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால், பொங்கல் வருவதற்குள், பொங்கல் பரிசினை அனைத்து இடங்களிலும் கொடுக்க இயலாத சூழ்நிலை உருவாகும். இதனையடுத்து, வருகின்ற ஜனவரி 21ம் தேதி வரை, பொங்கல் பரிசு வழங்கப்படும் என, பொங்கல் பரிசு வழங்கும் காலத்தினை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இந்த அறிவிப்பின் காரணமாக, பொங்கல் முடிந்தும் கூட, பொதுமக்கள் பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கலாம்.

HOT NEWS