தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு விநியோகத்திற்கான டோக்கம் வழங்கும் நிகழ்வானது, தற்பொழுது தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டும், தமிழக அரசானது பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பொங்கல் பரிசுடன் 2,500 ரூபாயும், ஒரு கரும்பும், ஒரு கிலோ பச்சரிசியும், முந்திரி, கிறிஸ்துமஸ் பருப்புகளும் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இலவச வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்களை இன்று முதல் விநியோகம் செய்ய தமிழக அரசுத் திட்டமிட்டு உள்ளது.
இந்த டோக்கன்களை, வீடுகளுக்கேச் சென்று வழங்க ரேசன் கடை ஊழியர்களை, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இன்று முதல், அடுத்த ஏழு நாட்களுக்குள், தமிழ்நாடு முழுவதும் ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, இந்த டோக்கன்களை விநியோகம் செய்ய உள்ளனர் ரேஷன் கடை ஊழியர்கள். ஜனவரி முதல் வாரம், பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.