ஜோதிகாவின் அடுத்த படம்! பொன்மகள் வந்தாள்!

15 July 2019 சினிமா
power-star-srinivasan.jpg

ஜோதிகா தற்பொழுது விறுவிறுப்பாக பலப் படங்களில், நடித்து வருகிறார். அவர் தன்னுடைய கணவர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெயின்மன்ட் நிறுவனத்திற்காக மட்டுமே, திரையில் தோன்றி வருகிறார். அவ்வாறு, அவர் தற்பொழுது ஒப்பந்தமாகி இருக்கும், திரைப்படம் பொன்மகள் வந்தாள்.

இந்தத் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நடிகர் சூர்யா தற்பொழுது வெளியிட்டார். இதில் கே. பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன் உட்பட பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தினை, ஜேஜே பிரெடிக் எழுதி இயக்குகிறார். கோவிந்த் வஸ்தா இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவில், ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங்கில் இப்படம் உருவாக உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியானது. இதனை நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா வெளியிட்டார்.

HOT NEWS