தமிழ்ராக்கர்ஸில் பொன்மகள் வந்தாள்! ரசிகர்கள் அதிர்ச்சி!

29 May 2020 சினிமா
ponmagalvanthalott.jpg

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், இன்று காலையில் இணைய வழி சினிமா தொழில்நுட்பம் மூலம், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு மற்றும் வினோதினி உட்படப் பலர் நடித்திருகின்றனர். முற்றிலும் க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தினை ஜேஜே ப்ரெட்ரிக் இயக்கி உள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏப்ரல் மாதம் வெளியாவதாகக் கூறப்பட்ட இந்தத் திரைப்படமானது, கொரோனா வைரஸின் காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வெளியாக முடியாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், இந்தப் படத்தினை ஓடிடி முறையில் இணையத்தில் வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. அப்படி வெளியிடப் பலரும் தடை விதித்திருந்த நிலையில், அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு, பொன்மகள் வந்தாள் திரைப்படம் 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்தப் படம், திட்டமிட்டப்படி இன்று காலையில் வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ள நிலையில், தற்பொழுது இந்தப் படமானது, தமிழ்ராக்கர்ஸ் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இணையத்தில் இப்படம் வெளியாகி உள்ளதால், ஹெச்டி தரத்தில், தமிழ்ராக்கர்ஸ் வலைதளத்தில் இப்படம் கசிந்துள்ளது. இது தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS