நடிகை ஜோதிகா நடிப்பில், இன்று திரைக்கு வந்திருக்கும் இல்லை, இல்லை, ஆன்லைனில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் பொன்மகள் வந்தாள்.
இந்தப் படத்தில் பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு மற்றும் வினோதினி உட்படப் பலர் நடித்திருகின்றனர். முற்றிலும் க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தினை ஜேஜே ப்ரெட்ரிக் இயக்கி உள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், தற்பொழுது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அமேசான் ப்ரைம் நிறுவனம் தான், இந்தப் படத்தினை நல்ல விலைக்கு வாங்கியுள்ளது. சரி படத்தின் விமர்சனத்திற்கு வருவோம். இந்தப் படம் பெண் குழந்தையைப் பற்றியக் கதை. ஜோதி என்ற பெண் இரண்டு வாலிபர்களைச் சுட்டுத் தள்ளுகின்றார்.
அவரைக் கைது செய்த போலீஸ் என்கவுண்டர் செய்துவிடுகின்றது. இது நடந்த 15 வருடங்கள் கழித்து, இந்த வழக்கினை மீண்டும், விசாரணைக்கு கொண்டு வர முயற்சிக்கின்றார் பெத்துராஜ். வேறு யாரும் அல்ல நம்ம பாக்யராஜ் தான். அவருடைய மகள் வெண்பா (ஜோதிகா) அவர் சார்பில், வாதாட ஆரம்பிக்கின்றார். இந்த வழக்கில் பலவித கோணங்கள், பலவித பார்வைகள் இருக்கின்றன.
நீதிமன்றமும் விசாரிக்கின்றது. பிறகு என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக் கதை. நேர்கொண்ட பார்வைப் படம் பார்த்திருப்பீர்கள். அதில், நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற காட்சிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். அதனை போல் இந்தப் படத்திலும், விறுவிறுப்பாக காட்சிகள் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது. இருப்பினும், அவைகளை ஜோதிகாவும், பார்திபனும் மேட்ச் செய்கின்றனர்.
படத்தில் பல லாஜிக் ஓட்டைகள், எதற்காக இந்தக் காட்சிகள் உள்ளன. திடீரென்று வரும் உணர்வசப்படக் கூடிய காட்சிகள் என பல விஷயங்கள் உள்ளன. இருப்பினும், இந்தப் படத்தினை அனைவரும் குடும்பத்துடன், ஒருமுறை பார்க்கலாம். வீட்டிலேயே பார்க்கலாம். அமேசான் ப்ரைமில். மொத்தத்தில் பொன்மகள் வந்தாள், வரவில்லை.