டிஜிட்டல் உலகில் குழந்தைகளுக்கு இணைந்து பாதுகாப்போம்! போப் உரை!

15 November 2019 அரசியல்
popefrancis.jpg

டிஜிட்டல் உலகில் நடைபெறும் குற்றங்களில் இருந்து, குழந்தைகளைப் பாதுகாக்க அனைவரும் இணைவோம் என, போப் பிரான்சிஸ் பேசியுள்ளார்.

இணைய உலகில், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ள போப், தொழில்நுட்பம் உலகினை எளிதாக இணைத்துள்ளது எனவும், தொலைத் தொடர்பானது மிக எளிதாகிவிட்டது எனவும் கூறினார். இருப்பினும், இந்த தொழில்நுட்பங்களால் பல தீமைகளும் இருக்கின்றன.

குழந்தைகள் பல விதங்களில் இந்த டிஜிட்டல் உலகில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய கண்ணியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியம். குழந்தைகளின் கல்விக்காக அவர்களுடைய பெற்றோர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்த தொழில்நுட்பம் மற்றும் இணைய வளர்ச்சியினால், மனிதர்களை கடத்தல் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் வளர்ந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். இவர் பேசும் பொழுது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள், பத்திரிக்கை, வர்த்தகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் என அனைவருமே இந்த விஷயத்திற்காக ஒன்று சேர்ந்து, நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

www.vaticannews.va/en/pope/news/2019-11/pope-francis-digital-child-abuse-congress-vatican.html

HOT NEWS