இனி அனைத்து மொழிகளிலும் தபால் தேர்வு! மத்திய அரசு அதிரடி!

16 July 2019 அரசியல்
power-star-srinivasan.jpg

தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடியதைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான அரசு அதிரடி அறவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறைத் தேர்வுகள் நடைபெறும் எனவும், தற்பொழுத நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்படுகிறது எனவும் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். இதனை திமுகவினர் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்துக் கட்சியினருமே, கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த, அஞ்சல் துறைத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். இதனால், அரசாங்க வேலைக்காக படித்து வரும் இளைஞர்கள், தமிழில் தேர்வு எழுதும் வாய்ப்பை இம்முறை பெறுகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி அல்ல. இது பாஜக அரசு ஜனநாயக முறைப்படி நடக்கிறது என்பதை காட்டுகிறது எனக் கூறியுள்ளார் மேலும், நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், இது திமுகவின் போராட்டத்திற்கும் மற்ற கட்சிகளின் ஒத்துழைப்புக்கும் கிடைத்த வெற்றி, என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுகவின் கோகுல இந்திரா, அஞ்சல்துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என அறிவித்தது, மக்களுக்குக் கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

HOT NEWS